பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்கும் முக்கிய இரு ஹாட் பிரபலங்கள்.!

Subscribe our YouTube Channel

பிரபல தனியார் தொலைக்காட்சிஎன விஜய் தொலைக்காட்சியில் ஆண்டு தோறும் ஒளிபரப்பாகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சி தற்போது 4வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இதனை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். கொரோனா தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி வரும் ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் பெயர்கள் நாளுக்கு நாள் வெளியாக்குவதும் அதனை அவர்கள் மறுப்பதுமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஷிவானி நாராயணன்,ஷாலு ஷம்மு,ரம்யா பாண்டியன், அமுதவாணன், புகழ் ஆகிய பிரபலங்களின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவை இவ்வாறு இருக்க கும்கி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லஷ்மி மேனன் மற்றும் கருண் ராமன் ஆகியோரும் பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓரினச்சேர்க்கை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கருண் ராமன் பேஷன் கொரியோகிராபராகவும் பல பிரபலங்களின் ஸ்டைலிஸ்ட்டாகவும் பணி புரிந்து வருகிறார்.