பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ள ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள பிரபலங்கள்.!வெளியான புகைப்படங்கள்

Subscribe our YouTube Channel

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஆண்டு தோறும் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த ஆண்டு கொரோனா காரணமாக பிற்போடப்பட்டிருந்த நிலையில் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி குறித்த இரு புரோமோவும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த வாரத்தில் 3வது புரோமோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இம்முறை யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல்களும் கசியத் தொடங்கின. அதேபோல் இம்முறை கொரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், பாடகர் ஆஜித், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், அனுமோகன், ரியோ ராஜ், சனம் ஷெட்டி உள்ளிட்டோர் இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் இவர்கள் அனைவரும் நட்சத்திர ஓட்டலில் தனிமைப் படுத்தபட்டிருப்பதாக தகவல் வெளியாகின.

தற்போது நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸ் பகுதியில் தனி அறையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதே போல் நடிகர் ரியோ ராஜூம் 4 சுவர்களுக்குள் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.இவர்கள் இருவரும் ஒரே ஹோட்டலில் தனிமை படுத்தப்பட்டிருக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது.