புண்ணியம் அருளும் புரட்டாதி மாதமும் சனிக்கிழமை விரதமும்.!

Subscribe our YouTube Channel

புரட்டாதி மாதம் ஆன்மீக வாய்புக்கள் நிறைந்த இந்த மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பிரம்மோட்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.புரட்டாதி மாதத்தில் வரும் சனிக் கிழமைகளும் மிக சிறப்பு வாய்ந்தவையாக நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதால் சிறந்த பலன்களை பெறமுடியும்.இந்த விரதம் நாம் செய்த புண்ணியங்களை இரட்டிப்பாக்கி தரும் வல்லமை கொண்டது என நம்பப்படுகிறது. புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு விரதம் இருந்து சிவ ஆலயம் அல்லது விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டு வழிபட்டால் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் நற்பலன்களை பெறலாம் என்பது ஐதீகம்.

சனீஸ்வரனுக்கு உரிய நிறம் கருப்பு.அவரின் வாகனம் காகம். அவருக்கு உகந்த தானியம் எள்.சனீஸ்வர விரதம் மேற்கொள்பவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து,நீராடி,சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு,கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும்.

துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை நிறைவு செய்யலாம்.

இதனால் தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.புரட்டாதி மாதத்தில் அசைவத்தை தவிர்ப்பது நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மழையும் வெய்யிலும் மாறி மாறி வரும். இதனால் உடலில் வெப்பம் மாற்றமடையும்.இதனால் உடலில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.ஆகவே இம்மாதத்தில் அசைவத்தை தவிர்ப்பது நல்லது என அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.