விடைபெற்றார் பாடும் நிலா-72 குண்டுகள் முழங்க முழு அரச மரியாதையுடன் உடல் நல்லடக்கம்.!

Subscribe our YouTube Channel

பிரபல பின்னணிப்பாடகர் S.P பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று இறைவனடி சேர்ந்து விட்டார்.கடந்த ஓகஸ்ட் 5ம் திகதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது என நம்பப்பட்ட நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து நேற்று அவரது உயிர் இம்மண்ணுலகை விட்டு விடைபெற்றுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பிரபலங்கள் இரசிகர்கள் உட்பட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

SPB யின் உடல் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து தற்போது தாமைரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.தொடர்ந்து அவரது உடலுக்கு குடும்பத்தினரால் இறுதிக்கிரிகைகளை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அவரது புத்த உடல் அவரது பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.