சர்ச்சை நாயகி மீரா மிதுன் மீது சென்னை காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

Subscribe our YouTube Channel

நடிகையும் மொடல் அழகியுமான மீரா மிதுன் சமீப காலங்களாகவே சமூக வலைத்தளங்களில் தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீத குறித்தும் சூர்யா மற்றும் ஜோதிகா குறித்தும் அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகித்து பேசி வீடியோ வெளியிட்டு வந்தார்.இது குறித்து நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் ரசித்தார்கள் காவல் நிலையத்தில் மீரா மிதுன் மீது புகார் அளித்தனர்.அத்துடன் நடிகை ஷாலு ஷம்மு மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் தங்களின் மீது அவதூறு அரப்புவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் மிஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரும் ராஸ் மிடாஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் எம்.கே.பி நகர் காவல் நிலையத்திலும், சென்னை காவல் ஆணையரகத்திலும் நடிகை மீரா மீதுன் சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசி வருவதாகவும் தனக்கு கொலை மிரட்டலும் கொடுத்து வருவதாகவும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஜோ மைக்கல் பிரவீன், மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். நீதிமன்ற ஆணைப்படி நேற்றிரவு எம்.கே.பி நகர் காவல் துறையினர் நடிகை மீரா மிதுன் மீது பொது இடத்தில் பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாசமாக பேசுதல்,கொலை மிரட்டல் விடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு உட்பட5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தனிநபர் தாக்குதல் நடத்தியதாக மீராமிதுன் மீது நேற்று முன்தினம் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.