கொரோனா ஊரடங்கு-நண்பர்களின் கட் அவுட்களின் முன்னிலையில் நடைபெற்ற திருமணம்.!வைரலாகும் புகைப்படங்கள்.

Subscribe our YouTube Channel

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ரோமானி மற்றும் சாம் ரோண்டியோ. இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.இவர்கள் இருவரும் தங்களது திருமணத்துக்கு உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமண நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.ஆனால் கொரோனா கோயத் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமண திகதியை ஒத்தி வைத்தனர்.சில மதங்களின் பின் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருமண திகதி உறுதி செய்யப்பட்டு நண்பர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

திருமண நிகழ்வில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே நபர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களும் திருமணத்துக்கு வர முடியாத சூழல். ஆனாலும் இனிமேலும் திருமணத்தை ஒத்திவைக்க முடியாது என முடிவு செய்த நிலையில் புதிய யுக்தியை அவர்களது திருமண விழாவில் கையாண்டனர்.

அதன்படி நண்பர்கள் படங்கள் அனைத்தையும் கட்அவுட்டுக்களாக எடுத்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.இதற்காக 2,000 பவுண்ட் செலவில் (இந்திய மதிப்பில் சுமார் 1.8 லட்சம் ரூபாய்) நண்பர்களின் படங்களை கட்அவுட்டுக்களாக வடிவமைத்து திருமண மண்டபத்தை நிரப்பினர்.இதில் எந்தக்கட்டுப்பாடுகளும் இல்லை அரசு விதிகளையும் மீறவில்லை.

நண்பர்களின் முழு உருவப்படங்கள், உறவினர்களின் குடும்ப படங்கள் அனைத்தையும் கட்அவுட் எடுத்து அதன் முன்பு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.