கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய நபரை சவப்பெட்டிக்குள் வைத்து நூதன தண்டனை வழங்கிய நாடு.!

Subscribe our YouTube Channel

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இவ்வைரசைட் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் இந்தோனேசியாவில் கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

அத்துடன் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடும் தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. அவ்வாறு விதிகளை மீறி தலைநகர் ஜதார்த்தவில் வெளியில் நடமாடிய நபருக்கு மாதிரி சவப்பெட்டியினும் படுக்க வைத்து நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.