கொரோனா தடுப்பூசி-ஒரே முறை செலுத்தினால் போதுமானது -60 ஆயிரம் பேருக்கு சோதனை-பிரபல நிறுவனம் தொடங்கியது.!

Subscribe our YouTube Channel

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல வழிகளில் முயன்று வருகின்றன. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியை கண்டு பிடிக்கும் முயற்சியில் அதி தீவிரமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றன.இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை பல்வேறு கட்ட சோதனைகளில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தினர் ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளனர். இந்த தடுப்பூசியை ஒருவருக்கு ஒரு முறை செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசியின் நம்பகத்தன்மை,தங்கும் திறன்,செயல் திறன் ஆகியவற்றை அமெரிக்கா,தென் ஆப்பிரிக்கா,அர்ஜெண்டினா, பிரேசில், சிலி, கொலம்பியா, மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளில் 60 ஆயிரம் பேருக்கு செலுத்தி சோதிக்கும் நடவடிக்கையை அந்நிறுவனம் நேற்று ஆரம்பித்துள்ளது.இந்த சோதனை கொரோனாவை தடுக்க ஒரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதுமா என்பதை அறியும் வழியாக அமைந்துள்ளது எனக்கூறப்படுகிறது.