ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் நாடுகள்-எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு.!

Subscribe our YouTube Channel

கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதனால் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாடுகள் ஊரடங்கை தளர்த்தி வருகின்றன.இது ஆபத்தான செயல் என உலக சுகாதாரத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் தீவிரமாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை கண்டுபிடித்தல், தனிமைப்படுத்தல், பரிசோதித்தல் மற்றும் கவனித்தல் போன்றவற்றை உலக நாடுகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென்றும், உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.