ரசிகரின் காலணியை தனது கையால் எடுத்துக் கொடுத்த நடிகர் விஜய்.!ரசிகர்கள் நெகிழ்ச்சி.!வீடியோ

Subscribe our YouTube Channel

பிரபல பின்னணிப்பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.அவரது உடலுக்கு பிரபலங்கள் மரியாதையை செலுத்தினர்.நேற்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அதன் பின் அவரது பண்ணை இல்லத்துக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு இன்று முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. SPB யின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய் வந்திருந்தார்.

அப்போது அவரைக்கண்ட ரசிகர்கள் ஆர்வம் மிகுதியில் விஜயை சூழ்ந்து கொண்டனர்.அந்த சமயத்தில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அந்த தருணத்தில் நடிகர் விஜயை காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்து செல்ல முயன்றனர்.

அந்த சமயத்தில் அப்போது ஏற்பட்ட நெரிசலில் ரசிகர்கள் சிலர் கீழே விழுந்தனர். அப்போது கீழே விழுந்த ரசிகர்களின் காலணிகளை விஜய் தாமாக முன் வந்து எடுத்துக் கொடுத்தார்.விஜயின் இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.