எனது மரணத்தை நேரலையாக ஒளிபரப்புங்கள்-பேஸ்புக் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்த நபர்.!

Subscribe our YouTube Channel

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் அலைன் கோக்.57 வயதாகும் இவர் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதனால் தன்னை கருணைக்கு கொலை செய்து விடுமாறு பிரான்ஸ் நாட்டு பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அரசு அதனை நிராகரித்து விட்டது. இதனை தொடர்ந்து மருந்து ஆகாரம் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் போராட்டம் செய்துள்ளார்.அத்துடன் தனது மரணத்தை முகநூலில் நேரலையாக பலரும் பார்க்க வேண்டும் என முகநூலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது வேண்டுகோளை முகநூல் நிறுவனம் நிராகரித்து விட்டது.

விடுதலையின் பாதை தொடங்குகிறது.என்னை நம்புங்கள் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற தலைப்புடன் இதுவரை நேரலையில் இருந்தார்.அதற்கு முகநூல் நிறுவனம் தடை விதித்துள்ளது.முகநூல் நிறுவனம் கூறியுள்ளதாவது,எங்கள் விதிகளின் படி யாருடைய தற்கொலையையும் ஒளிபரப்பு செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.மேலும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாவது’உங்களை அளித்துக்கொள்ள நம் நாட்டின் விதிகள் எப்போதும் துணை நிற்காது’என தெரிவித்துள்ளது.