பெண்களைக் கவரும் ‘நத்தை மசாஜ் பேஷியல்’.!

Subscribe our YouTube Channel

ஜோர்டான் நாட்டில் உள்ள அழகு நிலையங்களில் நத்தை மசாஜ் பேஷியல் செய்வது பெண்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.பெண்கள் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புவர்.சிலர் இயற்கையாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சருமத்தைப் பராமரிப்பர்.சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று மென்மேலும் அழகினை மெருகேற்றுவார்கள்.மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை புதுப்பிப்பதற்காக ஃபுருட் ஃபேஷியல், ஆர்கானிக், ஒய்ட்னிங், கோல்டுடன், முத்து ஃபேஷியல் என்று பல வித ஃபேஷியல்கள் செய்யப்படுகின்றன.

அப்படி இறந்த செல்களை புதுப்பிக்கும்போது முகத்திலுள்ள அழுக்கள் எல்லாம் நீங்கி முகம் பொலிவடையும். இந்நிலையில் ஜோர்டான் நாட்டில் பெண்கள் நத்தைகள் மூலம் பேஷியல் செய்வது பிரபலம் அடைந்து வருகிறது.

உயிருள்ள நான்கைந்து நத்தைகளை முகத்தில் விட்டு மேய விடுகிறார்கள்.அது முகத்தில் மேய்ந்து அழுக்குகளை எல்லாம் சுத்தம் செய்கிறது.நத்தை மசாஜ் செய்யும் பெண்கள் இதனால் தங்களின் முகம் புத்துணர்வாக இருப்பதாக கருத்து கூறியுள்ளனர்.