Google பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட Paytm செயலி.!

Subscribe our YouTube Channel

உலக அளவில் வணிக தொழில் நுட்ப செயலிகளில் ஒன்று Paytm. சமீபத்திய சென்சார் தகவல்களின் அடிப்படையில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அதிக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் வரிசையில் இச்செயலை 6வது இடத்தில் உள்ளது.இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது. இது குறித்து கூகுள் தெரிவித்துள்ளதாவது தங்கள் கொள்கைகளுக்கு எதிரான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடும் ஒன்லைன் விளையாட்டுகள் சூதாட்டங்கள் போன்றவற்றை குறித்த செயலி ஊக்குவிக்கிறது.

அத்துடன் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டாலும் வாடிக்கையாளர்களின் பணத்துக்கு எதுவம் ஆகாது.பத்திரமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.மேலும் ஏற்கவனே செல்போனில் டவுன்லோட் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் இச்செயலியை பயன்படுத்தலாம் எனவும் அனால் புதிதாக அப்டேட் செய்யவோ பதிவிறக்கம் செய்யவோ முடியாது என Paytm நிறுவனம் கூறியுள்ளது.