குஜராத்தில் நாயை கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்த அரசு அதிகாரி .!

Subscribe our YouTube Channel

குஜராத் மாநிலம் வடோடாரா மாவட்டத்தில் வசிப்பவர் பல்வந்த் கோஹில்.அரசு அதிகாரியான இவர் நாயை கொடூரமாக தாக்கி மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் ஏரியில் விசியுள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்துக்கு முன் இதே போன்று 4 தெரு நாய்களை கொடூரமாக கொலை செய்துள்ளத்தக்க அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளார்.குறித்த நபர் மிகவும் மோசமான மனநிலை கொண்டிருந்ததாலும் அவர் அரசு அதிகாரி என்பதும் மக்கள் புகார் கொடுக்க பயந்துள்ளார். ஆனால் தொடர்ச்சியாக அந்நபர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என எண்ணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அயல் வீட்டுக்காரரான பிரசாந்த் கோஹில் என்பவர் மேலும் சில நபர்களை துணைக்கு சேர்ந்து கொண்டு குஜராத் விலங்குகள் கொடுமையை தடுக்கும் அமைப்பிடமும் தகவல் கொடுத்துள்ளார். இதனை தவிர வடோடரா காவல்நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்,காயமடைந்த நாயை காரில் ஏற்றி வந்து அடித்ததை புகைப்பட ஆதாரமாகவும் காவல்துறையினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து முக்கிய ஆதாரங்கள் கிடைத்த பின் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துணை ஆய்வாளர் ஜெய்திப் சோங் தெரிவித்துள்ளார்.