முகக்கவசம் அணிய அறிவுறுத்திய முதியவரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்.!

Subscribe our YouTube Channel

ஹரியானா மாநிலத்தின் குறுக்கிராம மாவட்டம் நியூ காலனி பகுதியில் வசிப்பவர் தர்மேந்திரதாஸ். அவரது மகன் குஷ் .இவர்கள் இருவரும் அருகே உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளனர்.அப்போது அந்தப்பகுதியில் இளைஞர்கள் சிலர் முகக்கவசம் அணியாமல் நெருக்கமாக நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.அதனைப் பார்த்த தர்மேந்திரதாஸ் அந்த இளைஞர்களிடம் முகக்கவசம் அணியுங்கள் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் அவரையும் அவரது மகனையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தர்மேந்திரதாஸ் காவல்நிலையத்தோல் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.அவர்களை முக்கவசம் அணியுமாறு கூறினோம்.ஆனால் அவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்தனர். மேலும் சில இளைஞர்களை அழைத்து வந்து கட்டைகளால் எங்களை தாக்கினர்.

அங்கிருந்தவர்களில் சிலர் தலையிட்டு எண்களைக் காப்பற்றினர் என குறிப்பிட்டுள்ளார்.இந்த தாக்குதல் சம்பவத்தில் அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.மகனுக்கு மூக்கு,காது,தலை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.

தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் அளித்த புகாரின் பேரில் இளைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த இளைஞர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.