உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ரசிகர் வெளியிட்ட பதிவு – விரைவில் நலம்பெற இறைவனைப் பிரார்த்திப்பதாக ஆடியோ வெளியிட்ட சூப்பர்ஸ்டார் ரஜனி.!

Subscribe our YouTube Channel

மதுரையை சேர்ந்தவர் முரளி.சூப்பர்ஸ்டார் ராஜனிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜனிகாந்த் வெற்றி பெற விருப்பம் தெரிவித்து அவரது Twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது, தலைவா என் இறுதி ஆசை 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25k என்ற நிலையை உருவாக்கி கொடு.

உன்னை அரியணையில் ஏற்ற படுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் என பதிவிட்டுள்ளார்.அதற்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக நடிகர் ரஜனிகாந்த் அவர்கள் அவரது உடல் நாமம் பெற பிரார்த்திப்பதாகவும் குணமடைந்த பின் குடும்பத்தினருடன் தனது வீட்டுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் அபய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் சிறுநீரக பிரச்னை மற்றும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளன.