கணவனின் கொடுமைகளை தாங்க முடியவில்லை-கணவரை கொன்று படுக்கையின் கீழ் மறைத்த மனைவி.!

Subscribe our YouTube Channel

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் ஹமிர்வாஸ் நகரின் சங்கத்தால் கிராமத்தை சேர்ந்தவர்கள் நிர்மல் சிங் மற்றும் நீரஜ் தம்பதி.இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.தினமும் மனைவியை அடிப்பதையும் துன்புறுத்துவதையும் வழக்கமாக அக்கொண்டுள்ளார் கணவன் நிர்மல்.வழக்கம் போல அன்றும் இருவருக்கும் சண்டை ஏற்படவே மனைவி கணவனின் கழுத்தில் கயிறு ஒன்றால் இறுக்கினார். அதனால் கணவர் உயிரிழந்தார்.பயந்து போன மனைவி கணவரின் உடலை கட்டிலின் அடியில் மறைத்து வைத்துள்ளார்.நிர்மலை தேடி அவரது வீட்டுக்கு அண்ணன் அசோக் சிங் ஜாட் வந்துள்ளார்.

28 மணிநேரத்திற்கு மேலாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த உடலில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதன்பின்னரே நிர்மல் கொல்லப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது.தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பரிசோதனை முடிந்து உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நிர்மலின் மனைவி நீரஜ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.