ஐபிஎல் 2020-விராட்கோலிக்கு 12 லட்சம் அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்.!

Subscribe our YouTube Channel

துபாயில் நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 6வது லீக் ஆட்டத்தின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது.முன்னதாக முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.கேப்டன் K.L ராகுல் 69 பந்துகளில் 7 சிக்ஸா் 14 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் குவித்தாா்.இது ஐபிஎல் போட்டியில் K.L .ராகுல் அடித்த 2வது சதமாகும்.தொடர்ந்து ஆடிய பெங்களூா் அணி 17 ஓவா்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.பெங்களூருக்கு எதிராக சதமடித்த பஞ்சாப் கேப்டன் K.L.ராகுல் ஐபிஎல் போட்டியில் 2,000 ரன்களைக் கடந்தாா்.

ராகுல் தனது 60வது இன்னிங்ஸில் 2,000 ரன்களை எட்டியதன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டிய இந்தியா் என்ற பெருமையைப் பெற்றாா்.இந்நிலையில் இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது.

இதனால் அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இந்த சீசனில் விராட்கோலியின் அணி செய்யும் முதல் தவறு என்பதால், ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் படி 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.