பிரதமரின் மீது பானத்தை ஊற்றி விட்டு பெண் தப்பியோட்டம்.!வைரலாகும் வீடியோ.

Subscribe our YouTube Channel

அயர்லாந்தின் பிரதமர் லியோ வராத்கர்.இவர் டப்ளின் நகரில் உள்ள மெரியான் சத்துக்கத்தில் நின்று கொண்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துக் கொண்டு இருந்தார்.அந்த சமயத்தில் அங்கு வந்த பெண் அங்கிருந்தவர்களிடம் எதோ பேசிவிட்டு பிரதமரை நோக்கி வேகமாக சென்றார்.பின் கையில் வைத்திருந்த தேநீர் போன்றதொரு பானத்தை பிரதமர் முகத்தில் ஊற்றிவிட்டு அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தார்.

அந்த பெண் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதுக்கான எந்தவித காரணங்களும் இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.