மகாராஷ்ராவில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு.!மீட்பு பணி தீவிரம்.! வீடியோ

Subscribe our YouTube Channel

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள படேல் காம்பவுண்டில் உள்ள 3 மாடிக்கட்டிடம் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.இதில் தூங்கி கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கினார்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஓகஸ்ட் மாதம் 24ம் திகதியும் மகாராஷ்ராவின் ராய்காட் மாவட்டத்தில் 5மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.