மலேசியாவில் காணாமல் போன இளைஞரின் செல்போனில் குரங்கின் செல்பிகள்.!ஆச்சரியத்தில் இளைஞர்.!வீடியோ

Subscribe our YouTube Channel

மலேசியாவைச் சேர்ந்தவர் 20 வயதான சாக்ரடிஸ் ரோட்ஸி.கல்லூரி மாணவரான இவர் தனது அறையில் தூங்கும் பொது அவரது செல்போனை அருகில் வைத்து விட்டு தூங்குவது வழக்கம். சம்பவத்தன்றும் அதே போல தூங்கிய அவர் காலையில் எழுந்து பார்த்த போது செல்போனை காணவில்லை. அங்கிருந்த யாராவது திருடி செல்வத்துக்கான சாத்தியக் கூறுகளை இல்லை.தொடர்ந்து செல்போனின் லொகேஷனை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.அந்த லொகேஷன் அவரது வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியைக் காட்டியுள்ளது.

அவரது தந்தையின் செல்போனில் இருந்து தனது செல்போனை அழைத்த போது முழுதாக ரிங் சென்றுள்ளது.தொடர்ந்து சென்ற போது காட்டில் உள்ள பனைமரத்தின் அடியில் செல்போன் இருப்பதை பார்த்துள்ளார்.எடுத்து சென்று ஆராய்ந்து பார்த்ததில் ஆச்சரியம் கிடைத்தது.அதில் குரங்கு ஒன்று விதவிதமாக செல்பி எடுத்துள்ளது. சாக்ரடிஸ் அனைத்து புதைப்படங்களையும் விடியோவாக்கி அதனை தனது Twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தூங்கிய அறையின் ஜன்னல் வழியாக குரங்கு உள் நுழைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.