இரவு நேரத்தில் நடுவீதியில் இளைஞர்களின் மோசமான செயல்..!வீடியோ எடுத்து பதிவிட்ட நடிகர்.!

Subscribe our YouTube Channel

திரைப்பட நடிகரான விஷ்ணுவிஷால் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வெண்ணிலா கபடிக்குழு பலே பாண்டியா,குள்ளநரிக்கூட்டம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.சிறந்த கிரிக்கெட் வீரருமாவார். இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.சமூக வளையகாலத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தற்போது வீடியோ ஒன்றினை தனது Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது இரவு நேரத்தில் வீதியில் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளார்.அப்போது விஷ்ணு விஷாலின் காருக்கு முன் ஒரு கார் சென்று கொண்டிருந்தது.

அந்த காரில் இரு இளைஞர்கள் உள் அமராமல் காரின் கதவின் மேல் உட்காந்து பயணித்துள்ளனர்.இதனைப் பார்த்த நடிகர் விஷ்ணு விஷால் அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,நம் நாட்டின் படித்த இளைஞர்கள்.பொதுவாக நான் இதை செய்ய மாட்டேன்.

ஆனால் நான் இதனைப் பதிவு செய்கிறேன்.இந்த இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை மட்டுமல்ல பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பிரச்னை உண்டாக்கும் வகையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஹைதராபாத் காவல்துறையினர் இதனைக் கவனிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.