வளர்ப்பு நாயின் வடிவில் தோட்டத்தில் விளைந்த உருளைக்கிழங்கு-மகிழ்ச்சியில் விவசாயி.!

Subscribe our YouTube Channel

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜோன் கேட்ஜெர். இவர் தோட்டத்தில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்துள்ளார். கிழங்குகள் நன்றாக விளைந்ததும் மண்ணில் இருந்து தோண்டி எடுத்துள்ளார். அப்போது அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் 13 வருடங்களாக வளர்த்து வரும் செல்லப்பிராணியாக நாயின் முகம் போலவே ஒரு உருளைக்கிழங்கு இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். குடும்பத்தினரும் அதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது வளர்ப்பு நாயான டேவ் குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது குடும்பமே சோகத்தில் இருந்துள்ளது.

இந்நிலையில் அந்நாயினைப் போலவே உருளைக்கிழங்கு இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அந்த உருளைக்கிழங்கை சமைக்காமல், எந்த பாதிப்பும் இல்லாமலும் பாதுகாத்து வருகின்றனர்.அவர்களது செல்ல நாய்க்கு ‘உருளைக்கிழங்கு டேவ்’ என புதிய பெயரும் சூட்டி செல்லமாக கொஞ்சி வருகின்றனர்.