புதுச்சேரியில் வயதான தம்பதியரை நடுவீதியில் செருப்பால் அடித்த அரசு ஊழியர்.!வீடியோ

Subscribe our YouTube Channel

புதுச்சேரியின் தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர்கள் சுப்புராஜன் மற்றும் லட்சுமி தம்பதி.ஜெயநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுப்புராஜன் காவலாளியாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே ராமலிங்கநகரை சேர்ந்த சரவணன்(55) என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.இவர் மாடுகள் அடிக்கடி அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைவது வழக்கமாக இருந்துள்ளது.இதனால் கணவன், மனைவி இருவரும் மாடுகளை குடியிருப்புக்குள் நுழையாமல் தடுக்க சரவணனிடம் கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சரவணன் நடு வீதியில் வயதான தம்பதியரை செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார்.

இக்காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக சுப்புராயன்அளித்த புகாரின் பேரில் தன்வந்திரி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தேடப்பட்டு வரும் சரவணன் தலை மறைவாகியுள்ளார்.