சங்கீத மேகத்தில் கலந்தார் பாடும் நிலா S.P பாலசுப்பிரமணியம்.!சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!பிரபலங்கள் இரங்கல்

Subscribe our YouTube Channel

புகழ் திரைப்பட பின்னனிப் பாடகர் S.P பாலசுப்பிரமணீயம் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் 1946ம் ஆண்டு ஜூன் மாதம் 4 ம் திகதி எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை நெல்லூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார்.1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது.

இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை தேறி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.இந்நிலையில் நேற்று மாலையில் SPB யின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிர் பிரிந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.