பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை-தொலைக்காட்சி உடைந்ததால் பெற்றோருக்கு பயந்து விபரீத முடிவு.!

Subscribe our YouTube Channel

காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல் மற்றும் கவிதா தம்பதி.வடிவேல் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.மனைவி கவிதா தனியார் வங்கியில் ஊழியராக உள்ளார்.இவர்களுக்கு பிரைட் ஷாம் என்ற 14 வயது மகன் உள்ளார்.தாய் மற்றும் தந்தை வேலைக்கு சென்றிருந்த நிலையில் ஷாம் மட்டும் வீட்டில் இருந்துள்ளான்.இந்நிலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்த ஷாம் வெகு நேரமாகியும் வெளியே வராததால் நண்பர்கள் அறைக்குள் சென்று பார்த்தனர்.அப்போது பிரைட் ஷாம் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பிரைட் ஷாமை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஷாமை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உதவி காவல் ஆய்வாளர் அந்தோணி சகாய பரத் விசாரணை மேற்கொண்டார்.இந்த சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தொலைக்காட்சி பெட்டியை ஷாம் சானிடைசரை கொண்டு சுத்தம் செய்துள்ளான். அதனால் தொலைக்காட்சி பழுதடைந்துள்ளது.

இதனால் பெற்றோர் திட்டுவார்கள் என அஞ்சியே ஷாம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்தது.ஷாமின் பெற்றோரிடம் விசாரித்ததில் அவனுக்கு வயிற்றுவலி இருந்தது.அதனால் அவன் துக்கு போட்டு இறந்திருக்கலாம் என கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.