பாடும் நிலா SPB-யின் உடல் அவரது பண்ணை வீட்டில் நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.!

Subscribe our YouTube Channel

பிரபல பின்னணிப்பாடகர் S.P பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.கடந்த ஓகஸ்ட் 5ம் திகதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது என நம்பப்பட்ட நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து இன்று அவரது உயிர் இம்மண்ணுலகை விட்டு விடைபெற்றுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பிரபலங்கள் இரசிகர்கள் உட்பட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

பாடகர் SPB யின் உடல் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து தற்போது தாமைரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.அங்கு உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.மேலும் பண்ணை வீட்டில் SPBயின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் SPB யின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு S.P பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.