கோயில் காளையை கடப்பாரையால் தலையில் குத்திய நபர்.!கடும் சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்.!

Subscribe our YouTube Channel

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அருகே உள்ள எ-ரெட்டிபட்டி கிராமத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க காளை ஒன்று கிராம மக்களால் கோயில் காளையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.அந்த காளை அனைத்து தினமும் உரிமையுடன் கிராம மக்களின் வீடுகளுக்கு சென்று பசியாற்றி வந்தது.இந்நிலையில் காளையின் தலையில் கடப்பாரையால் குத்தியுள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த அக்காளை இரத்த வெல்லத்துடன் அந்த கிராமத்தில் உள்ள கோயிலின் முன்பாக வந்து படுத்திருந்தது. இதனைக்கண்ட கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து கல்லாவி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் கொரப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோயில் காளையை கடப்பாரையால் தலையில் குத்திய சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை பெரும் ஏற்படுத்தியுள்ளது.