எல்லைக்கு செல்லும் வழியில் கதறி அழும் இளம் சீன இராணுவ வீரர்கள்.!வீடியோ

Subscribe our YouTube Channel

இந்திய சீன எல்லையான லடாக் கால்வன் பள்ளத்தாக்கில் இருநாட்டு இராணுவ வீரர்களுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி மோதல் ஏற்பட்டது.அதனைதொடந்து எல்லையில் பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது.இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் 6ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சீனா வீரர்களை லடாக் எல்லையில் குவித்து வருகிறது. இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லைக்குச் செல்லும்போது சீன வீரர்கள் அழுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோவில் சீன இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் இராணுவத்தில் பசுமை மலர்கள்’ என்ற சீன இராணுவப் பாடலை அழுது கொண்டே பாடுவதைக் காண முடிகின்றது.தைவான் செய்தி அறிக்கையின்படி,இந்த காட்சிகள் எடுக்கப்படுவதற்கு முன்னர் ஆரம்பத்தில் ஃபுயாங் சிட்டி வீக்லியின் விசாட் பக்கத்தில் வெளியிடப்பட்டன.

மேலும் அசல் வீடியோவில் 10 புதியவர்கள் சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள புயாங் நகரத்தின் யிங்ஜோ மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டியது.அனைத்து இளம் வீரர்வாளர்களும் கல்லூரி மாணவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் ஐந்து பேர் லடாக்கின் எல்லையில் “திபெத்தில் பணியாற்ற முன்வந்தனர்.

ஹெபாய் மாகாணத்தில் ஒரு இராணுவ முகாமுக்கு துருப்புக்கள் சென்று கொண்டிருந்தபோது, புயாங் ரயில் நிலையம் அருகே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வீரர்கள் தங்கள் குடும்பங்களிடம் இருந்து விடைபெறும் பொது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என சீன அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.