நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும்-ரசிகர்கள் மண்டியிட்டு பிரார்த்தனை.!வீடியோ

Subscribe our YouTube Channel

தமிழ் சினிமாவின் முக்கிய இளம் நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன்.சிம்பு என அனைவரலாலும் அறியப்படுமிவர் தற்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவின் காதல் மற்றும் திருமணம் போன்ற செய்திகள் அடிக்கடி வதந்திகளாக வருவதுண்டு.கடந்த சில நாட்களுக்கு வந்த வதந்திக்கு தந்த டி.ராஜேந்தர் அவர்கள் சிம்புவுக்கு பெண் பார்ப்பதாகவும் விரைவில் திருமணம் எனவும் விளக்கமளித்திருந்தார்.இந்நிலையில் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சிலர் ரத்தினகிரி முருகன் கோவிலில் வித்தியாசமான முறையில் வழிபாடு மேற்கொண்டனர்.

சிம்பு படத்தை வைத்துக் கொண்டு மனதில் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வைத்துக் கொண்டு மண்டியிட்டு படியேறிச் சென்று முருகனை தரிசித்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் மச்சி மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிம்பு ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.அத்துடன் சாலையோரங்களில் ஆதரவின்றி இருந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.