ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அறிமுகம்- 5ஜி வசதிகளுடன் அறிமுகமான ஐபோன் 12 சீரிஸ்-விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.?

Subscribe our YouTube Channel

ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 12 சீரிஸ் மொடல்கள் அறிமுகமாகியுள்ள. இந்த முறை மொத்தம் 4 மாடல்களில் அறிமுகமாகியுள்ள.ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என்பவை ஆகும்.இவற்றினை இந்திய சந்தைகளில் வரும் ஒக்டொபர் 30 திகதியில் இருந்து வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 12 சீரிஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஐபோன்களில் ஆப்பிளின் ஏ 14 பயோனிக் எஸ்ஓசி பொருத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 தொடரில் 15W வரை வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்ட மேக்ஸேஃப் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்கள் ஆனது கருப்பு, நீலம், பச்சை, ப்ராடெக்ட் (ரெட்) மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வாங்க முடியும்.

ஐபோன் 12 மினி மாடலின் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.69,900 என்றும், அதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.74,900 என்றும் மற்றும் டாப்-எண்ட் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.84,900ஏ என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக உள்ள ஐபோன் 12 மாடலின் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.79,900 என்றும், அதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.84,900 என்றும் மற்றும் அதன் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.94,900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக உள்ள ஐபோன் 12 ப்ரோ மாடலின் பேஸ் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.1,19,900 என்றும், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்கள் முறையே ரூ.1,29,900 மற்றும் ரூ.1,49,900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

கடைசியாக உள்ள ஐபோன் 12 புரோ மேக்ஸ் மாடலின் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடானது ரூ.1,29,900 என்றும், அதன் 256 ஜிபி விருப்பமானது ரூ.1,39,900 என்றும் இதன் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.1,59,900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.