உ.பியில் உரிய அனுமதி இன்றி தாடி வைத்திருந்ததால் துணை ஆய்வாளர் இடைநீக்கம்.!

Subscribe our YouTube Channel

உத்திரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி.இவர் அம்மாவட்டத்தின் ரமலா காவல்நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.இவர் நீண்ட தாடியுடன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், பாக்பத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் திடீரென்று இந்த்சர் அலியை பணி இடைநீக்கம் செய்துள்ளார்.இது குறித்து கருத்து கூறிய SP. அபிஷேக் சிங் காவலர்கள் தாடி வளர்க்க கூடாது என்பது விதிமுறை. அவருக்கு பல முறை அறிவுறுத்தியும் கேட்கவில்லை. இதனால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக இந்த்சார் அலி கூறுகையில், 1994ம் ஆண்டு கான்ஸ்டபிளாக வேலைக்கு சேர்ந்தேன்.

அப்போதே லேசான தாடி இருந்தது. அதன் பின்னும் தாடி வைத்தே வருகிறேன். நான் எத்தனையோ இடத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் எனக்கு இப்படியொரு பிரச்சனை வந்தது இல்லை. இந்த தாடி சம்பந்தமாக நான் பலமுறை அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தேன்.ஆனாலும் அதில் ஒன்றிற்கு கூட இதுவரை பதில் இல்லை எனக்கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து கூறிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அப்துல் ரஹ்மான் தாடியை வைத்திருக்க காவல்துறை உயரதிகாரிளிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகும். சீக்கியர்களைத் தவிர காவல்துறை சேவைகளில் வேறு யாரும் அனுமதியின்றி தாடியை வைக்கக் கூடாது. இது காவலருக்கான நடத்தை விதிமுறைகளில் இருக்கிறது எனது தெரிவித்துள்ளார்.