மாணவர்களின் வருகை பதிவேட்டில் சாதி,மதத்தினை குறிப்பிடக் கூடாது-ஆந்திர அரசு உத்தரவு-மக்கள் வரவேற்பு.!

Subscribe our YouTube Channel

ஆந்திர மாநிலத்தின் பாடசாலைகளில் வருகைப்பதிவேட்டில் மாணவர்களின் சாதி மற்றும் மதத்தினை குறிப்பிடக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அம்மாநிலத்தில் மாணவர்களின் வருகைப்பதிவேட்டில் பெண்களின் பெயரை சிவப்பு மையினாலும் ஆண்களின் பெயரை ஊதா மையினாலும் எழுதுவது இதுவரை வழக்கமாக இருந்து வந்தது.இந்நிலையில் பெண் பிள்ளைகளின் பெயரை சிவப்பு மையினால் எழுதக்கூடாது.

அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என பாடசாலைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.