பாலாவின் பேச்சால் பிக்பாஸ் இல்லத்தில் சர்ச்சை.!பெண்களை அவதூறாக பேசினாரா பாலா..?

Subscribe our YouTube Channel

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.இதனை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் நேற்று பிக்பாஸ் இல்லத்தில் விஜயதசமி நிகழ்வு கொண்டாடப்பட்டது. அதனால் தொடர்ச்சியாக 4 மணித்தியாலங்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் அனிதா கூறிய கருத்தால் சுரேசுக்கும் அனிதாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் பெரும்பான்மையான போட்டியாளர்களும் ஒன்று கூடி பாலாவை எதிர்ப்பது போல அமைந்துள்ளது.

அவர் கூறிய கருத்தை சர்ச்சையாக்கிய அர்ச்சனா உள்ளிட்ட சில போட்டியாளர்கள் பாலாவை எதிர்த்து பலமான வார்த்தைகளை உபயோகிப்பதை காணமுடிகின்றது.இதன் உண்மைத் தன்மை இன்றைய நிகழ்ச்சி வெளியான பின்னரே தெரிய வரும்.