கலாய்த்த கமல்…வெட்கப்பட்ட அனிதா சம்பத்..இந்த வாரம் வெளியேறப் போவது யார்.? வெளியான தகவல்..!

Subscribe our YouTube Channel

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்களாக ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா, அர்ச்சனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது.அதில் நடிகர் கமல் போட்டியாளர் அனிதா சம்பத்திடம் ஜாலி கேலி செய்ய.,’சார், நீங்க எது பேசினாலும் என்னை கலாய்க்குற மாதிரியே இருக்கு” என வெட்கப்பட்டு சிரிக்கிறார் அனிதா சம்பத்.

அத்துடன் இன்று நிகழ்ச்சியின் விதிப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு போட்டியாளர் வெளியேறுவர்.அதன் படி இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.அந்த வகையில் இந்த வாரம் ஆயித் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஆனால் அவரிடம் eviction free pass இருப்பதால் அவர் அதனை தனக்காக பயன்படுத்தி கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த வாரம் எந்த போட்டியாளரும் வெளியேற்றப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.