பிக்பாஸ் சீசன்-4ல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்.!

Subscribe our YouTube Channel

இந்தியாவில் தமிழ்,தெலுங்கு ,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி சமீபகாலமாக மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தும் வருகிறது.இந்நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கிறது.இதனை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் ‘வைல்ட் டாக்’ என்கிற படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு நாகார்ஜுனா விடுப்பு எடுத்துள்ளார்.அவருக்கு பதிலாக நடிகை சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 3வது சீசனில் சில காரணங்களுக்காக சில நாட்கள் விடுப்பு எடுத்திருந்தார். அப்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.