சர்ச்சைகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வனிதா. சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பீட்டர் பாலை பிரிந்ததாக அறிவித்தார். இந்நிலையில் பாஜகவில் நடிகர்களான ராதாரவி,நமிதா,காயத்ரி ரகுராம் ஆகியோர் மாநில அளவில் பொறுப்பில் உள்ளனர். அவர்களின் வரிசையில் தற்போது நடிகை வனிதா பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் வரவிருக்கும் தேர்தலில் பிரச்சாரங்களில் களமிறங்கவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.ஆனால் இதுவரை வனிதா தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.