ஆசீர்வாதம் வழங்கிய பாதிரியாருக்கு ஹைபை கொடுத்த சிறுமி-வைரலாகும் வீடியோ

Subscribe our YouTube Channel

குழந்தைகள் என்றாலே குறும்புக்கு பஞ்சம் இருக்காது.அவர்கள் அறியாமல் செய்யும் செயல்கள் கூட மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடும். அந்த வகையில் ஒரு சிறுமியின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதாவது தேவாலயம் பிரார்த்தனையை முடித்த பிறகு பாதிரியார் ஆசிர்வாதம் வழங்குகிறார்.அப்போது ஆசி பெறுவதற்காக தாயுடன் சேர்ந்து மகளும் செல்கிறாள். அப்போது ஆசிர்வாதம் வழங்குவதற்காக பாதிரியார் கைகளை உயர்த்துகிறார். அதனை பார்த்த குழந்தை தனக்கு ஹைபை காட்டுகிறார் என நினைத்து பாதிரியாரின் கையை தட்டுகிறாள். அந்த சமயத்தில் அவளை தயார் தடுக்கிறார்.

இருப்பினும் பாதிரியாருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.தனது கைகளால் வாயை மறைத்து சிரித்து விட்டு மீண்டும் ஜெபத்தை தொடங்குகிறார். தேவாலயத்தில் இருந்த நபரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.