அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் செலினா. ஏற்கனவே 2குழந்தைகளுக்கு தாயான நிலையில் 3வது முறையாக கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் செலினா கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார்.குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத காரணத்தினால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள செலினாவின் முன்னாள் காதலர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு இருந்த பிரிட்ஜை திறந்து பார்த்தபோது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முகம் மற்றும் கழுத்தில் பயங்கர காயத்துடன் செலினா சடலமாக கிடந்துள்ளார்.இதனை தொடர்ந்து செலினாவின் முன்னால் காதலரை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செலினாவை கொலை செய்த காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.