தொழிலதிபரை மணந்தார் நடிகை காஜல் அகர்வால்.! திரையுலக பிரபலங்கள் வாழ்த்து.!

Subscribe our YouTube Channel

தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பரத்துக்கு ஜோடியாக பழனி திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய்,கமல்,சூர்யா என பல முன்னணி நடிகர்களின் நடித்துள்ளார். 35 வயதாகும் இவருக்கும் தொழில் அதிபர் கவுதம் கிட்சுலு என்பவருக்கும்சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஜல் அகர்வால் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

பின் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலால் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அழைக்கப்பட்டு இருந்தனர்.இதனை தொடர்ந்து காஜல் அகர்வால் மற்றும் கவுதம் கிட்சுலு தம்பதிகளுக்கு திரையுலக பிரபங்கள்,ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற்னர்.