குழந்தையிடம் நாய் காட்டிய தாயன்பு-இணையத்தில் வைரலாகும் வீடியோ

Subscribe our YouTube Channel

சீனாவின் சுஜோவில் தனது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார் சன். இவர் தனது வீட்டில் கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாயை வளர்த்து வருகிறார்.தனது முகத்துக்கு பயன்படுத்த மாய்ஸ்சரைசிங் கிரீம் வாங்கி வந்துள்ளார் சன்.அதனை தொடர்ந்து தனது விட்டு வேலைகளை முடித்து விட்டு வரலாம் என சென்று விட்டார்.அந்த நேரத்தில் அவரின் மகள் அந்த கிரீமை எடுத்து விளையாட்டுத்தனமாக பயன்படுத்தி விட்டாள். இதனை கவனித்த சன் குழந்தையை திட்டியுள்ளார்.

இதனை கண்ட அவர்களது வளர்ப்பு நாய் குழந்தையை திட்ட வேண்டாம் எனும் முகபாவனையில் அவரை முறைத்து பார்க்கிறது. ஆனாலும் குழந்தையை ஆறுதலுக்காக கட்டி அனைத்துக் கொள்கிறது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.