கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான சாதனை-286 ஓட்டங்களை எடுத்த சுவாரஷ்ய சம்பவம் உண்மை தானா.?

Subscribe our YouTube Channel

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அறியப்படாத சுவாரஸ்ய பக்கங்களும் உண்டு.அதாவது 1894 ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பேட்ஸ்மேன் அடித்ததில் பந்து அங்கிருந்த jarrah என்னும் மரத்தில் சிக்கிக் கொண்டது.இதையடுத்து பேட்ஸ்மேன் 6 கிமீ தொலைவிற்கு ஓடி 286 ஓட்டங்களை எடுத்துள்ளனர்.பந்தை இழந்து விட்டதாக அறிவிக்குமாறு பந்துவீச்சாளர் நடுவரிடம் வலியுறுத்தி உள்ளார். பந்து அவர்கள் கண்ணுக்கு தெரிந்ததால் நடுவர்கள் மறுத்து விட்டனர். மரத்தில் சிக்கிய பந்தை பல வழிகளில் எடுக்க முயற்சித்துள்ளனர்.

கோடரி கொண்டு மரத்தை வெட்டுவது, துப்பாக்கியால் குறிவைத்து சுடுவது போன்ற முயற்சிகள் என்று கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் தொடக்க வீரர்கள் ரன் எடுத்து கொண்டே எடுத்துள்ளனர். ஒரு வழியாக பந்து மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது.

அதனை யாரும் கேட்ச் செய்யவில்லை. ஆனால் அதற்குள் தொடக்க வீரர்கள் 286 ரன்களை ஓடியே எடுத்துள்ளனர்.இது படிக்கும் போது உண்மையில்லை என்தோன்றலாம்.அவுஸ்திரேலியாவில் நடந்த இந்த சம்பவம் இங்கிலாந்து பத்திரிகையில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.