தோனியின் தீவிர ரசிகர் கட்டிய மஞ்சள் வீடு -அதற்கு தோனியின் பதில்.! வீடியோ

Subscribe our YouTube Channel

CSK அணியின் தொடர் தோல்விகளுக்கு பல காரணங்கள் முன்வைத்து விமர்சிக்கப்பட்டாலும் அந்த அணிக்கு ஆதரவாக பல ரசிகர்களும் உள்ளனர் என்றே சொல்லலாம்.அந்த வகையில் கடலூரை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணா.கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர இரசிகர் ஆவார்.இவர் தனது வீட்டுக்கு முழுவதுமாக மஞ்சள் நிற வண்ணம் பூசியுள்ளார்.ஆங்காங்கே சில இடங்களில் தொனியில் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.இந்த வீட்டின் புகைப்படம் CSK ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ குறித்து தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் பேசியுள்ள தோனி ‘நான் சில தினங்களுக்கு முன் அந்த இல்லத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பார்த்தேன். அவர்கள் எனக்கான ரசிகர் மட்டுமில்லை.

நமது சென்னை அணிக்கும் மிகப் பெரிய ரசிகர் தான். அந்த வீட்டின் மூலம் CSK மற்றும் என் மீதான அவர்களது அன்பும், உணர்வுகளும் அதிகம் தெரிகிறது. அப்படி ஒரு வீட்டை வடிவமைப்பது அவ்வளவு எளிதல்ல.அவரின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

அதன் பின் தான் இப்படி ஒரு செயலை செய்ய முடியும். சமூகவலைத்தளங்களில் பதிவிடும் பதிவுகள் போல மறைந்து செல்லாமல் இது பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்க கூடிய ஒரு விஷயமாகும். அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என தோனி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். CSK ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோவும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.