505 கோடி செலவில் மகளுக்கு திருமணம் செய்த தொழிலதிபர்… வாழ்வையே மாற்றிய கையெழுத்து.!பெரும் பணக்காரரின் தற்போதைய நிலை.!

Subscribe our YouTube Channel

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவருமான லஷ்மி மிட்டல் சகோதரர் பிரமோத் மிட்டல் நிதிமன்றத்தினால் திவாலான நபர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.இவரின் இந்த நிலைக்கு என்ன காரணம் என பார்த்தால் பிரமோத் தனது தந்தை, மனைவி, மகன் மற்றும் மைத்துனர்கள் எனப் பலரிடம் 25 பில்லியன் பவுண்ட்ஸ் கடன்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து திவாலான மனிதராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.அவர் வீழ்ச்சிக்கு அடி நாதமாக அமைந்தது அவர் போட்ட ஒரே ஒரு கையெழுத்து தான். மிட்டல் சகோதரர்கள் இந்தியாவில் தங்களின் தொழிலைத் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தினார்கள். லட்சுமி மிட்டலின் ஆர்சலர் மிட்டலின் தலைமையிடமாக நெதர்லாந்து உள்ளது.

பிரமோத் இஸ்பாட் நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.லட்சுமி மிட்டலின் ஆர்சலர் மிட்டலின் தலைமையிடமாக நெதர்லாந்து உள்ளது. நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் போஸ்னிய கோக் தயாரிப்பாளரான ”Global Ispat Koksna Industrija Lukavac” தயாரிப்பாளரான என்ற நிறுவனம் பெற்ற கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.

ஆனால் அந்த நிறுவனமோ பெற்ற கடனை 166 மில்லியன் டாலரை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தத் தவறி உள்ளது. இதனை அடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு போஸ்னியாவில் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இந்தியாவில் மாநில வர்த்தகக் கழகத்தில் 2700 கோடி மோசடி செய்து அதற்கான விசாரணையும் இவர் சந்தித்து வருகிறார்.இதனிடையே கடந்த 2013ம் ஆண்டு முதல் தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி உள்ளார்.

மகளின் திருமணத்திற்காக டச்சு நாட்டை சேர்ந்த முதலீட்டு வங்கியாளர் உடன் சேர்ந்து 50 மில்லியன் பவுண்டுகளை செலவு செய்துள்ளார். இது தற்பொழுது இந்திய மதிப்பில் 505 கோடி ஆகும்.இந்த சம்பவம் குறித்தது கருத்து தெரிவித்த பிரமோத்,எனக்கு எந்த தனிப்பட்ட வருமானம் இல்லை.

நானும் எனது மனைவியும் தனியாக வங்கிக் கணக்குகளை வைத்துள்ளோம் எனது மனைவியின் வருமானம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனது குடும்பம் மற்றும் மனைவியிடமிருந்து தான் எனது தனிப்பட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் பணம் பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.