துர்கா பூஜையில் சிறுமியை பேய் பிடித்திருப்பதாக கூறி கொடூரமாக தாக்கிய சாமியார்.! வீடியோ

Subscribe our YouTube Channel

மத்திய பிரதேச மாநிலத்தின் நாடோ கிராமத்தில் துர்கா பூஜை நடைபெற்றது.அதில் பலர் கலந்து கொண்டனர்.அந்த நிகழ்ச்சியில் சிறுமி ஒருவரின் தலை முடியை பிடித்து இழுக்கிறார் சாமியார் போல தோற்றம் கொண்ட நபர் ஒருவர்.வலியால் சிறுமி கதறி அழுகிறார்.அதனை பொருட்படுத்தாத அந்நபர் சிறுமிக்கு பேய் பிடித்திருக்கிறது எனக்கூறி கொடூரமாக தாக்குகிறார்.அத்துடன் நீ யார்.? என கேட்கிறார். என்னை தீய சக்தி பிடிக்கவில்லை எனக்கூறியும் கேட்காத அந்நபர் தலைமுடியை பிடித்து இழுத்து கடுமையாக அளிக்கிறார்.இதனை அங்கிருந்த பலர் வேடிக்கை பார்த்து கொண்டி இருந்துள்ளனர்.

அதனை தடுக்க யாரும் முன்வரவில்லை.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது .அதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை தேவை அத்துடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.