கொரோனா 2வது அலை-மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்கு உத்தரவு.!

Subscribe our YouTube Channel

கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.பல்வேறு நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் நோயின் தாக்கம் குறைந்தபாடில்லை.பல உலக நாடுகளில் கடும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன.தற்போது மெதுவாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது இந்நிலையில் கடும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் பிரான்சின் பாரிஸ், லில்லி, லியோன், மார்சில்லி, துலூஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனாவின் 2வது அலை பரவத்தொடங்கியுள்ளது.

இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் முக்கிய நகரங்களில் சனிக்கிழமை முதல் 4 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊடரங்கு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி பேட்டியின் பொது அந்நாட்டு அதிபர் கூறியதாவது ‘ஐலே-டி-பிரான்ஸ் பிராந்தியத்திலும், லில்லி, கிரெனோபில், லியோன்,மார்சில்லி, ரூவன்,செயின்ட்-எட்டியென், மான்ட்பெல்லியர், துலூஸ் நகரங்களிலும் இந்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்.

மேலும் கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால், கட்டுப்பாட்டை நாம் இழக்கவில்லை. நம்மை கவலையடையச் செய்யும் சூழ்நிலையில் இருக்கிறோம். தொற்றுநோயின் முதல் அலையின் தாக்கத்தை வைத்து இந்த முடிவுகளை எடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.