பிரான்சில் திடீர் ஊரடங்கு உத்தரவு-பாரிஸ் நகரில் சுமார் 700 கிலோ மீட்டருக்கு வரலாறு காணாத வாகன நெரிசல்.!

Subscribe our YouTube Channel

கொரோனா நோய்த் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்சில் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு மீண்டும் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. முக்கிய காரணங்களுக்கு மட்டுமின்றி மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்ததால் பாரிஸ் நகரத்தைச் சுற்றி வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சுமார் 700 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையில் வாகனங்கள் நெரிசலாக அணிவகுத்து நின்றதாகவும் இது வரலாறு கனத்த வாகன நெரிசல் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெரும்பான்மையான மக்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதே இந்த மெகா நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது.