15 வருடங்களாக தொடர்ந்து கோமா நிலையில் இருந்த இளவரசர்-பெண்ணின் குரலை கேட்டதும் கையசைத்த அதிசயம்.!வீடியோ

Subscribe our YouTube Channel

சவூதி அரேபியாவின் இளவரசர் Al-Waleed bin Khalid Al-Saud.இவர் கடந்த 2005ம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்த இராணுவ கல்லூரியில் விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவருக்கு முலையில் இரத்த கசிவு ஏற்பட்டது.தொடர்ந்து அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் அவர் காப்பாற்றப்பட்டார். ஆனால் துரதிஷ்ட வசமாக இளவரசர் கோமா நிலைக்கு சென்றார்.அதனை தொடர்ந்து இளவரசர் மருத்துவர்களின் கண்கவிப்பில் இருந்தார்.திடீரென கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசரின் உடலில் சிறிது அசைவு ஏற்பட்டது.

ஆனாலும் அதன் பின் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மருத்துவ கண்காணிப்பிலிருந்த இளவரசர் Al-Waleed bin Khalid Al-Saudயிடம் பெண் ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் ‘Hi, Didi hello, hello let me see, hi, எனக் கூற இளவரசர் தனது விரல்களை அசைகிறார்.

அந்த பெண் மீண்டும் பேசப் பேச இளவரசர் மீண்டும் தனது முழு கையை சிறிதளவு உயர்த்துகிறார். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. கோடீஸ்வரரின் வாரிசான இளவரசர் ‘Al-Waleed bin Khalid Al-Saud’யின் தந்தை தனது மகன் எப்படியும் குணமடைவார் என்ற நம்பிக்கையை ஒரு போதும் கைவிடாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.