முகக்கவசம் அணிந்தவாறு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நாய்-வைரலாகும் வீடியோ

Subscribe our YouTube Channel

அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் நாய் ஒன்று முகக்கவசம் அணிந்தவாறு சாலையில் சென்றுள்ளது.இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் சாலையில் ஒரு பெண் நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். அந்த நாய்க்கும் முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இதனை சாலையில் சென்று கொண்டு இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டார்கள், சிரித்தார்கள். சிலருக்கு, இந்த நாய் சேனிடைசும் செய்து கொள்ளுமோ என கிண்டல் செய்தும் வருகின்றனர்.சிலர் முகக்கவசம் அணிய மறுக்கும் மனிதர்களுக்கு இது எடுத்துக்காட்டு என பதிவிட்டு வருகின்றனர்.