உயிருள்ள சுமார் 6 லட்சம் தேனீக்களால் உடலை மூடி கின்னஸ் சாதனை படைத்த நபர்.! வீடியோ

Subscribe our YouTube Channel

சீனாவை சேர்ந்தவர் Ruan Liangming. இவர் தனது உடல் முழுவதும் தேனீக்களால் மூடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.இந்த சாதனை குறித்த வீடியோ முகநூலில் வெளியிடப்பட்டுள்ளது. தேனீக்களின் கனமான கவசம் என முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் உடல் முழுவதும் உயிருள்ள தேனீக்கள் பறந்து முடியுள்ளன.அந்த நபர் ஆடாமல் அசையாமல் அப்படியே நிற்கிறார். 63.7 கிலோ கிராம் எடை கொண்ட சுமார் 6,37,000 தேனீக்களை பயன்படுத்தி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதில் 60 ராணி தேனீக்களும் அடங்கும்.இந்த சாதனையை பற்றி Ruan Liangming கூறியதாவது தேனீக்களை கையாளும் போது பொறுமையாக இருக்க வேண்டும். அது உங்களை ஒருமுறை கொட்டிவிட்டால் அதன்பிறகு இறந்துவிடும்.

அதனால் நாம் அதற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாவிட்டால் தேனீக்களால் நமக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தேனீக்கள் நிலையற்ற மனநிலையில் இருப்பதை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக அதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதே நல்லது. இல்லையென்றால் ஆபத்தாக முடிந்துவிடும் எனக் கூறியுள்ளார்.